வாகனங்களுக்கு நிதி வசதியளிக்கும் போது நீண்ட கால அனுபவமிக்க இலங்கையின் பழைமை வாய்ந்த நிதி நிறுவனம் ஒன்றாக ஆறு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலமாக நம்பிக்கையுடன் செயற்பட்டமையால் எலாயன்ஸ் நிதி நிறுவனமானது நீங்கள் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் போது நிறந்த தீர்மானம் மற்றும் தெரிவு செய்வதற்கான சிறந்த இடமாக விளங்குகின்றது.
Autosure என்பது எலாயன்ஸ் நிதி நிறுவனத்தின் விசேட வர்த்தக நிறுவனமாகும். அது நிறுவனத்தின் மோட்டார் வாகன குத்தகை வியாபாரம் மற்றும் வாடிக்கையாளருக்கு வாகன பரிமாற்றம் மற்றும் வாகன குத்தகை (Ezi Drive) என்பவற்றுடன் வாகன சர்விஸ் உட்பட அனைத்து விடயங்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு முழுமையாக அமையப் பெற்றுள்ள அலகொன்றாகும். மேலும் வாகன வியாபாரத் துறையில் 18 வருடங்களுக்கு மேற்பட்ட விசேட அனுபவம் கொண்டுள்ள Autosure வாடிக்கையாளரின் பெறுமதியானது வர்த்தக திட்டமிடல் கொண்ட அதற்காகவே அர்ப்பணித்த குழுவொன்றின் உதவியுடன் வாடிக்கையாளருக்கு வழிகாட்டி மேலதிக நன்மையினை வழங்குகின்றது.
மேலும் இந்த அலகு முதல் தரம் வாய்ந்த பல்வேறு வாகன வியாபாரிகளுடன் இணைந்து வாகன பரிமாற்றத்திற்கான வசதியளிக்கின்றது.
விரித்தியடைந்து வருகின்ற நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களின் தேவையினைப் பூர்த்தி செய்வதற்கும் மற்றும் எரிபொருளுக்கு அதிக கேள்வி நிலவுகின்ற பின்னணியில் தமக்கென வாகனம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள வேண்டிய எதிர்பார்ப்பு அதிபரித்து வருகின்ற இலங்கை மக்களுக்கு அதன் நிமித்தம் நடுத்தர கால மற்றும் நீண்ட கால ரீதியாக அதிக வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அலகு மிகவும் சிறந்த ஆயத்தத்துடன் உள்ளது.