எலாயன்ஸ் நிதி நிறுவனத்தின் அனைத்து பேண்தகு செயற்பாடுகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் பணி “தளிர்” நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமாகும். 2009 ஆம் ஆண்டிலே இந்நிகழ்ச்சித் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்ததுடன், கம்பனியின் பேண்தகு செயற்பாட்டினை மேலும் மேம்படுத்தல், சமூக மற்றும் டிஜிட்டல் ஊடகத்தின் வழியே கொண்டு செல்வதற்கும் இது எமக்கு உதவியது.
எமது பணிகள் பற்றி ஆர்வம் காட்டுகின்றவர்களுக்கு எமது சமூக மற்றும் சுற்றாடல் சார்ந்த பேண்தகு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கும் நாம் இதனை பயன்படுத்தினோம். “தளிர்” என்பதன் மூலம் எலாயன்ஸ் நிதி நிறுவனத்தின் “புதிய ஆரம்பம்” எனும் பொருளை நாம் வைத்துள்ளோம்.
கம்பனியின் சமூக மற்றும் சுற்றாடல் பெறுமதிகளை பிறப்பிப்பதற்காக எமது அனைத்துத் தரப்பினரும் வெற்றிகரமான பயணிப்பதற்கு புதிய நுழைவொன்று இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக எமது பேண்தகு பெறுமதியை பிறப்பிக்கும் பயணத்திற்கு உதவுவதற்கு விருப்பம் தெரிவிக்கின்ற உள்ளூர் மற்றும் சர்வதேச இரு தரப்பினருக்கும் ஒத்துழைப்பு வழங்கக் கூடிய சமூக வலைத்தளம் 2019 ஆம் ஆண்டிலும் zzo`M ZZஇணையத்தளம் 2020 ஆம் ஆண்டிலும் ஆரம்பிக்கப்பட்டன.