Skip to main content
search

பேண்தகு நிதியியலுக்கான பூகோள ரீதியான செயற்பாட்டில் காலடி எடுத்து வைத்தல் மற்றும் அதன் மேம்பாட்டிற்காக பணியாற்றிய இலங்கையின் முதலாவது வங்கியல்லா நிதி நிறுவனம் எனும் பெருமையை எலாயன்ஸ் நிதி நிறுவனம் பெற்றுக்கொண்டது. ஐக்கிய நாடுகளின் அணுசரனை கிடைக்கப் பெறுகின்ற பேண்தகு அபிவிருத்திக் குறிக்கோள்கள் (SDGs) மற்றும் பாரிஸின் காலநிலை ஒப்பந்தம் (COP21) பொதுவாக “2030 நிகழ்ச்சி நிரல்” என்றழைக்கப்படுகின்ற 7 ஆவது பூகோள நிதி மாநாட்டில் (GSFC 7) யூலை மாதம் 13 ஆம் திகதி ஜேர்மனியின் கால்புரூஹே நகர மண்டபத்தில் கால்புரூஹே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

கைச்சாத்திடும் நிகழ்வில் உயர் மட்டத்திலான அரச அதிகாரிகள், பார்வையாளர்கள் மட்டத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நிதித் துறையின் சிரே~;ட உறுப்பினர்கள் உள்ளிட்ட 200 இற்கும் மேற்பட்ட அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். பேண்தகு அபிவிருத்திக்கான ஐரோப்பிய அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி அ~hட் சப் அவர்களும், இலங்கை எலாயன்ஸ் நிறுவனத்தின் பிரதித் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொமானி த சில்வா அவர்களும் இவர்களில் அடங்குவர். தீர்வின் சாட்சியாளராக கார்ல்புரூஹே நகர சபையின் மேயர் கௌரவ கலாநிதி பிரேன்க் மென்ட்ரூப் அவர்கள் கைச்சாத்திட்டார். “நிகழ்ச்சி நிரல் 2030” வெற்றிகொள்வதற்காக நிதித் துறையின் பொறுப்புத் தன்மையிநன் பெறுமதி பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், ஏனைய விடயங்களில் பேண்தகு அபிவிருத்திக் குறிக்கோள்கள் மற்றும் பாரிஸின் காலநிலை ஒப்பந்தம் என்பவற்றினை ஒவ்வொரு நாட்டிலும் மேற்கொள்ள வேண்டிய விதமும் பேண்தகு பொருளாதாரமொன்று மற்றும் இணைந்த பூகோள செயற்பாடுகள் நிதித் துறையில் செயற்படும் விதம் என்பனவும் பசுமை பேண்தகுத் தன்மைக்கான கொள்கை சட்டகமொன்றினைத் தயாரிப்பதற்கான வழிகாட்டல்கள் அரசுகளுக்கும் ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களுக்கும் இதன் போது பெற்றுக்கொடுக்கப்பட்டன.

கார்ல்புரூஹே ஒப்பந்தம், பேண்தகு அபிவிருத்திக்கான ஐரோப்பிய அமைப்பு (EOSD)இ ஆசிய மற்றும் பசுபிக் அபிவிருத்தி நிதி நிறுவனங்களின் அமைப்பு (ADFIAP)இ ஆபிரிக்க அபிவிருத்தி நிதி நிறுவன சங்கம் (AADFI) மற்றும் கார்ல்புரூஹே நகரம் ஆகிய நிறுவனங்களின் இணைந்த செயற்பாடாக இது விளங்குகின்றது.

கடிதம: http://www.ft.lk/article/638125/Alliance-Finance-signs-%E2%80%98Karlsruhe-Resolution%E2%80%99-on-Sustainable-Finance